சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் உயர்வு என்று மேலாண்மை இயக்குநர் நந்தக்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த ஊதிய உயர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. மேற்பார்வையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.22,313ல் இருந்து ரூ.33,023 ஆகவும், விற்பனையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.19,413ல் இருந்து ரூ.30,284 ஆகவும், உதவி விற்பனையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.17,925ல் இருந்து ரூ.28,680 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட புதிய ஊதியத்தின் அடிப்படையில் பி.எப். பிடித்தம் செய்யப்படும். பணியாளர்களின் பங்காக 12 சதவீதம் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் நிலையில், நிர்வாகத்தின் 12 சதவீத பங்களிப்பை டாஸ்மாக் நிறுவனமே ஏற்கும்.






