அருண்குமார் – ஜீவிதா திருமணம்: முன்னாள் அமைச்சர் சி.வெ.கணேசன் வாழ்த்து
திட்டக்குடி: கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை – இளவரசி தம்பதியரின் மகன் அருண்குமாருக்கும், காட்டுமன்னார்கோவில் வட்டம் ஈச்சம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கோதண்டபாணி – கஸ்தூரி தம்பதியரின் மகள் ஜீவிதாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமண விழா கல்லூர் கூட்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
திருமண விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான சி.வெ.கணேசன், கழுதூர் வெங்கடேஸ்வரா கல்லூரி தாளாளர் சி.வெ.க.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்கள் அருண்குமார் – ஜீவிதா ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.






