வாழப்பாடியில் மாவீரர் மலைச்சாமி 37-ஆம் ஆண்டு நினைவேந்தல்

வாழப்பாடியில் மாவீரர் மலைச்சாமி 37-ஆம் ஆண்டு நினைவேந்தல்

மலர்தூவி வீரவணக்கம் செலுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்

வாழப்பாடி, செப். 14:

சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வாழப்பாடி ஒன்றியம் மற்றும் பேரூர் கழகங்கள் ஏற்பாடு செய்திருந்த மதுரை மண்ணின் மைந்தர் மாவீரர் மலைச்சாமி அவர்களின் 37-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஏற்காடு சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் பெ. வேல்முருகன் தலைமை வகித்தார். இதில் மாவீரர் மலைச்சாமி அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டப் பொருளாளர் சிறுத்தை சீனிவாசன், மாவட்ட அமைப்பாளர் விசி. கண்ணன், வாழப்பாடி பேரூர் பொருளாளர் ப. கார்த்திகேயன், பேரூர் துணைச் செயலாளர் க. கோவிந்தராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் செ. தர்மலிங்கம், சி. சிறுத்தை முருகேசன், ஒன்றிய அமைப்பாளர் ஜெய்பீம் சே. சுரேஷ், பேரூர் செயலாளர் ர. வேல்முருகன், பேரூர் பொருளாளர் ந. ஹபிப்ரகுமான், மாவட்டப் பொறுப்பாளர் கு. கண்ணதாசன், ஒன்றியப் பொறுப்பாளர்கள் லோ. சரவணன், குறிஞ்சி செ. கார்த்தி, முகாம் பொறுப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி வீரவணக்கம் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலரஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்திய அனைவருக்கும் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் பெ. வேல்முருகன் நன்றி தெரிவித்தார்.