சேரன்மகாதேவியில் பள்ளி மாணவன் மாயம்

வீரவநல்லூர், செப்.11: சேரன்மகாதேவியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாயமானது குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
சேரன்மகாதேவி பொழிக்கரை காமராஜர் தெருவைச சேர்ந்தவர் செல்வகுமார் மகன் திவாகர்(12).  அப்பகுதியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்ததை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளி செல்லாமல் வீட்டிலிருந்த திவாகர் மதியம் திடீரென மாயமாகியுள்ளார்.

உறவினர் வீடுகள் மற்றும் பொது இடங்களில் தேடியும் திவாகர் கிடைக்காததால் அவரது பெற்றோர்கள் சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குபதிந்த சேரன்மகாதேவி போலீசார் மாயமான மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.