செப் 9 கூட்டத்தில் விசிக பங்கேற்கும் : திருமாவளவன்

தமிழக வெற்றிக் கழக ஆதரவு கட்சிகளின் 2ஆவது கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஆதரவு கட்சிகளுக்கு தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

நேற்று இடதுசாரி தலைவர்கள் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இன்று (செப்டம்பர் 5) விசிக தலைவர் திருமாவளவனை அமைச்சர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘ஏற்கனவே கூட்டணி சம்பந்தமாக ஒரு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக வரும் 9ம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

இதற்காக இன்று அண்ணன் திருமாவளவனை சந்தித்து அழைப்பு விடுத்தோம்

9ம் தேதி மாலை அனைத்து விபரங்களும் உங்களுக்கு தெரியும்” என்று கூறினார்.

தொடர்ந்து திருமாவளவன் பேசுகையில், “செப்டம்பர் 9ஆம் முதல்வர் தலைமையில்  நடைபெறும் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அமைச்சரவையில் இடம்பெறாத மதிமுக உள்ளிட்ட சில கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

இதில் தமிழக வெற்றி கழகம் தலைமையில் கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர்கள் இன்று வந்து அழைப்பு விடுத்துள்ளனர். இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்”என்று கூறினார்.