நான்கு வழி சாலை விரிவாக்க பணியால் கிராம சாலை சேரும் சகதியுமாகி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

புவனகிரி அருகே நான்கு வழி சாலை விரிவாக்க பணியால் கிராம சாலை சேரும் சகதியுமாகி பொதுமக்கள் வாகன
ஓட்டிகள் அவதி

பருவ மழை தொடர்வதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பெரிய குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக சேத்தியாத்தோப்பு- விருத்தாசலம் சாலை செல்கிறது. இந்நிலையில் இதே
பகுதியில் நான்கு வழி சாலை விரிவாக்க பணியும் அதனால் கட்டப்பட்ட மேம்பாலமும் இருந்து வருகிறது. இவ்வாறான சூழலில் இந்த சாலையில் பாலத்தின் கீழாக கடந்து செல்லும் போது கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியும், வேதனையும் அடைந்து வருகின்றனர். அதன் காரணம் தற்போது மழை பெய்து வருவதால் இந்த பாலத்தின் கீழ்பகுதியில் சாலை விரிவாக்க பணிக்கு களிமண் மற்றும் பல்வேறு மண் ஏற்றுச்செல்வம் வாகனங்களால் கொண்டு செல்லப்படும் மண் சிதறி சாலையிலே விழுவதால், மழையால் அது கடுமையான சேரும் சவுதியுமாகி உள்ளது.
இதனை கடக்கும் வாகனங்கள் விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் கிராம மக்களும் நடமாட முடியாத நிலையில் இந்த பகுதி சாலை இருக்கிறது. உடனடியாக பாலத்தின் கீழ் பகுதியை சரி செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதேபோன்று கிராம மக்களையும் வாகன ஓட்டிகளையும் வேதனைப்படுத்துவது போல சாலை அமைப்பது சரியானதா? எனவும் கிராம மக்கள் வேதனையோடு கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது தொடர்ந்து மழை காலம் ஆரம்பித்துள்ளதால் இனியும் இந்த சாலை அதிக சேதம் அடையும் ஆபத்து உள்ளதால் உடனடியாக பாலத்தின் கீழ்ப்பகுதியில் சாலையை விபத்து இல்லாமல் கடப்பதற்கு சரியாக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.