அருள்மிகு கொங்கை அம்மன் கோயில் திருவிழா விளக்கு பூஜை நடைபெற்றது!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள காயல்பட்டு மதுரா பேட்டோடை இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கொங்கை அம்மன் கோயில் திருவிழாவானது நடைபெற்று வருகிறது இந்த நிலையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது இன்று இரண்டாம் நாளான இன்று பெண்கள் கும்மியடித்து வழிபட்டனர் மாலையில் இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் அனைவரும் மிகவும் பயபக்தியுடன் விளக்கு பூஜை நடைபெற்றது இந்த விளக்கு பூஜைகள் அம்மனை வேண்டி தங்கள் குடும்பம் மற்றும் உலக நன்மைக்காகவும் பூஜைகள் செய்தனர் குத்து விளக்கு மற்றும் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் வைத்து ஒரே கோரசாக பூஜைகள் செய்தனர் நாளைய தினம் அம்மனின் வீதி உலா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த பூஜையில் கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்