அதிகாரிகள் பதவிக்காலம் முடிந்து 5 மாதங்களாகியும் தேர்தல் நடைபெறாத நிலையில், 7 பேர் கொண்ட தற்காலிக (Adhoc) குழு அமைப்பு
திருநெல்வேலி, ஆக.30:
திருநெல்வேலி மாவட்ட ஆதி திராவிட மகாஜன சபையின் (ADMS) ஆயுட்கால உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சமாதானபுரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சபையின் ஆயுட்கால உறுப்பினர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு திருச்செல்வம் தலைமை தாங்கினார். முத்துமணி அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆதி திராவிட மகாஜன சபையின் நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 30.04.2026 அன்று நிறைவடைந்த நிலையில், அதன்பின்னர் சுமார் 5 மாதங்கள் கடந்தும் பொதுக்குழுக் கூட்டமும், புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடைபெறாதது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, சபையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். சபையின் நிர்வாகப் பணிகள் தொடர்ந்து நடைபெறவும், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை சங்கத்தின் செயல்பாடுகளை முறையாக மேற்கொள்ளவும் Adhoc Committee (தற்காலிக குழு) அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, புதிய நிர்வாகக் குழு தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்கும் வரை, கீழ்கண்ட 7 பேர் கொண்ட Adhoc Committee சபையின் நிர்வாகப் பணிகளை கவனித்து நடத்தும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Adhoc Committee உறுப்பினர்கள்:
- டாக்டர் எம். கணேசன்
- எஸ். திருச்செல்வன்
- கே. அண்ணாதுரை
- ஏ. பிச்சை
- வி. காந்தி சேகர்
- எஸ். வரதராஜ்
- எம். மோகன்
கூட்டத்தில் கே.பி.கே. ராஜேந்திரன், சங்கரதாஸ் (பெங்களூர்), பிரபுகாளிதாஸ், திருமதி தமிழ்செல்வி உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
கூட்டத்தின் விவாதங்களையும் தீர்மானங்களையும் அரசுபிரபாகன் தொகுத்து வழங்கினார். இறுதியில் அவர் நன்றி தெரிவித்தார்.
சமூகத்தின் நலன், சபையின் ஒற்றுமை மற்றும் எதிர்கால நிர்வாக செயல்பாடுகள் சிறப்பாக அமைய வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.






