சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்

சேரன்மகாதேவி:
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், சேரன்மகாதேவி மின்சார வாரிய அலுவலகம் சார்பில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் உதவி மின் பொறியாளர் திரு. கைலாசமூர்த்தி, சிறப்பு நிலை முகவர் திரு. முருகேசன், முதல் நிலை முகவர் திரு. மோகன், வணிக ஆய்வாளர் திரு. மலுக்காமலி, வணிக உதவியாளர் திரு. சதீஷ்குமார், வருவாய் மேற்பார்வையாளர் திரு. முருகன், கணக்கீட்டாளர் திரு. முத்துராமன், மின்பாதை ஆய்வாளர்கள் திரு. முருகன் மற்றும் திரு. முத்துப்பெருமாள், கம்பியாளர் திரு. சுப்பிரமணியன், கள உதவியாளர் திரு. மகேஸ் ராஜா, கேங்மேன்கள் திரு. ஜெபக்கனி தேவாரம் மற்றும் திரு. புதிய ராஜா, கம்பியாளர் திருமதி. வள்ளி, வணிக உதவியாளர் திருமதி. சரஸ்வதி உள்ளிட்ட K2 ஊழியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவையொட்டி சிறுவர், சிறுமியர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சுதந்திர தின விழாவில் மின்வாரிய ஊழியர்கள், சிறுவர்-சிறுமியர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றதால் விழா உற்சாகமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.