விசிக தமிழ்தேசிய எழுச்சி மாநாடு முன்னிட்டு புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

விசிக தமிழ்தேசிய எழுச்சி மாநாடு முன்னிட்டு புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்.-
கல்லூர், ஆக.7: கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் கல்லூர் கூட்ரோட்டில் அமைந்துள்ள ஐஸ்வரியம் திருமண மண்டபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டை முன்னிட்டு மாவட்ட செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
திட்டக்குடி தொகுதி மாவட்ட வணிகர் அணி சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, வணிகர் அணி மாவட்ட துணை அமைப்பாளரும், புல்லூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான சுப்ரமணியன் மற்றும் கல்லூர் ராமதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட நிதிச்செயலாளர் கழுதூர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக வணிகர் அணி மாநில செயலாளர் கருப்புதுரை, மாநில துணைச் செயலாளர்கள் ராஜவேல், திருஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டின் நோக்கம், கட்சியின் வளர்ச்சி, வணிகர் அணியின் பங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து சிறப்புரையாற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள், வணிகர் அணி உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் சான்விஜி கார்த்திக் மற்றும் குமரகுரு ஆகியோர் நன்றி கூறினர்.
தமிழ்நாட்டிலேயே தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.