திருச்சி, ஜூலை 30:
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கழக ஆக்கப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில், கழகத்தின் வளர்ச்சி, அமைப்புப் பணிகளை மேலும் வலுப்படுத்துவது, உறுப்பினர் சேர்க்கை, பொதுமக்களுடனான தொடர்பை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளின் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு, தங்களது பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய கழகப் பணிகள் குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஒன்றியக் கழகச் செயலாளர் கங்காதரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், கிளைக் கழகச் செயலாளர்கள், ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், பி.எல்.ஏ.2 நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.






