ரஜினி தொண்டருக்கு லதா ரஜினி பாராட்டு
ஆலங்குளம்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் தின்பண்டம் வியாபாரி மாரிமுத்து ஆலங்குளம் ஒன்றியம் கடங்கநேரி
கிராமத்தைச் சேர்ந்தவர் இவர் ரஜினி பெயரில் ரத்ததானம் செய்துள்ளார்
67 வயதான மாரிமுத்து ரஜினியை சந்திக்க
2025 இல் காயில் செருப்பு கூட அணியாமல் நடந்தே சென்றவர்
கொட்டும் மழையில் தலைவரைக் காணும் ஆர்வத்தில் சென்ற மாரிமுத்துவை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் துணைவியார் லதா ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார்
மேலும் ரஜினியின் அண்ணன் பெங்களூரு சத்திய நாராயணராவ் கெய்க்வாட் மற்றும் ரத்ததான கழக நிறுவனர் வெங்காடம் பட்டி
பூ திருமாறன் கையெழுத்திட்ட பிரம்மாண்ட சான்றிதழை லதா ரஜினிகாந்த் வழங்கி வாழ்த்தினார்
தென்காசி மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் மக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசியமான தேவைகளை மாரிமுத்து போன்ற ரஜினி நீண்ட கால தொண்டர்கள் நிறைவேற்ற துணை நிற்க வேண்டுமென லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்
ஏற்பாடுகளை வேல்சாமி செய்திருந்தார்
மாரிமுத்துவை தெரியாத பள்ளி குழந்தைகள் பாவூர்சத்திரம் பகுதியில் இருக்க மாட்டார்கள்
வள்ளியூர் சண்முகம்
திருமங்கலம் வான்புகழ்
அம்பை காந்திதாசர் ஆகியோர் மாரிமுத்துவிற்கு வாழ்த்து கூறினர்






