சமூகப் பணிக்காக சேவரத்னா விருது பெற்ற இரா. பழனிக்கு வாழ்த்து

 

வீரவநல்லூர்: அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கம் (கிழக்கு) சார்பில், வீரவநல்லூர் திமுக அவைத் தலைவரும், வாசகர்கள் வட்ட துணைத்தலைவரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேரன்மகாதேவி பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவருமான இரா. பழனி அவர்களுக்கு சமூகப் பணிகளைப் பாராட்டி ‘சேவரத்னா’ விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற இரா. பழனியைப் பாராட்டும் வகையில், ஆன்மீகத் தொண்டரும், இரத்ததான கொடையாளருமான கு. பாலமுருகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது இரா. பழனியின் சமூகப் பணிகளையும், பொதுமக்களுக்காக அவர் ஆற்றி வரும் சேவைகளையும் பாராட்டி, தொடர்ந்து சமூகப் பணிகளில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளைத் தெரிவித்தார்.