முத்தமிழறிஞர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா: சமாதானபுரத்தில் நாளை சிறப்பு நிகழ்ச்சி

முத்தமிழறிஞர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா: சமாதானபுரத்தில் நாளை சிறப்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி, ஜூன் 2:

முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 103வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாளை (03.06.2026) காலை 10.30 மணிக்கு பாளையங்கோட்டை சமாதானபுரம் ரவுண்டானா, EB அலுவலகம் அருகே சிறப்பு புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்படவுள்ளது. இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளருமான மு. அப்துல் வகாப், மாநில சிறுபான்மை அணி தலைவர் டி.பி.எம். மைதீன்கான், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் என். மாலைராஜா, திருநெல்வேலி மாநகர மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர். ராஜு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ். லெட்சுமணன், தச்சை சுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி தலைவர் மூலிகுளம் பிரபு பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் மைக்கேல் ராஜேஷ், பேபி கோபால், மேற்கு மாநகர பொறுப்பாளர் சு. சுப்பிரமணியன், கிழக்கு மாநகர பொறுப்பாளர் ஏ.எல்.பி. தினேஷ் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள், முன்னோடிகள் மற்றும் உடன்பிறப்புகள் பங்கேற்க உள்ளனர்.

நிகழ்ச்சிக்கு கழக சிறுபான்மை அணி நிர்வாகி பனிமயம் கி.நி. அண்ணாதுரை தலைமை தாங்குகிறார். பாளை வடபகுதி பொறுப்பாளர் எம். சையது முகைதீன் முன்னிலை வகிக்கிறார். இதனுடன் மாவட்ட மற்றும் மாநகர அளவிலான பல்வேறு நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞர் அணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சமூக சேவகர் டாக்டர் ஆர். ஞானசோமராஜ் (முன்னாள் மாவட்ட கழக பிரதிநிதி) தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

கலைஞர் அவர்களின் சமூகநீதி, தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் மக்கள் நலப் பணிகளை நினைவுகூரும் வகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.