100 சதவீத தேர்ச்சி பெற்ற காசிநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு விழா

100 சதவீத தேர்ச்சி பெற்ற காசிநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு விழா

ஜூன்-1

சிறப்பு பூஜை.நடத்தி மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, இந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனையை கொண்டாடும் வகையில், ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஊர் பொது மைதானத்தில் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து பாராட்டு விழா நடத்தினர்.முன்னதாக புதுப்பட்டி முருகன் கோவிலில் சிறப்பு.பூஜை நடத்தி மாணவ மாணவியருக்கு மாலை.அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
விழாவில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, கேக் வெட்டிக் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்களின் வெற்றிக்கு காரணமான தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
பொதுமக்கள் பேசுகையில், அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான கல்வி சாதனைகளை படைத்து வருவது பெருமைக்குரியது என்றும், எதிர்காலத்திலும் மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஊர் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் வக்கீல் சிவகுமார்,நயினார்,புதுப்பட்டி ஆசிர்வாதம்,பேரூராட்சி தலைவர் பால் விநாயகம்,துணை தலைவர் வேல்துரை மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து.கொண்டனர்.
காசிநாதபுரம் அரசு உயர்நிலை பள்ளியை மாணவர்கள் நலன் கருதி மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.