ரபாடா : மொராக்கோவில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பத்தொன்பது பேர் உயிரிழந்தனர் . மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
வடஆப்ரிக்க நாடான மொராக்கோவில் நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் இரண்டு இடிந்து விழுந்தது . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர் . இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர் . இந்த விபத்தில் பத்தொன்பது பேர் உயிரிழந்தனர் . மேலும் பதினாறு பேர் பலத்த காயமடைந்தனர் . இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது . இடிந்து விழுந்த இரண்டு கட்டடங்களில் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது . கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி பத்தொன்பது பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
மொராக்கோவில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்
மொராக்கோவில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பத்தொன்பது பேர் பலி ; மீட்பு பணிகள் தீவிரம்






