சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பொங்கல் விழா

சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் – பொங்கல் விழா

சேரன்மகாதேவி, திருநெல்வேலி மாவட்டம் | 14.01.2026

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலைய வளாகத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழா பாரம்பரிய முறையிலும் உற்சாகமான சூழலிலும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கு மதிப்பிற்குரிய சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளர் உயர்திரு அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் தர்மராஜ் அவர்கள் முன்னிலையில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் உதவி காவல் ஆய்வாளர்கள் சுடலைக்கண்ணு, அன்ன ஜோதி,  சிறப்பு உதவி ஆய்வாளர் ஹரிஹர சண்முகம் உள்ளிட்ட பெண் காவலர்கள், ஆண் காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் பொங்கல் அடுப்பு அமைத்து பொங்கல் வைத்து, பாரம்பரிய முறையில் விழா நடத்தப்பட்டது. காவலர்கள் மட்டுமின்றி, பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இதில் கலந்து கொண்டு காவல் துறையுடன் இணைந்து தமிழர் திருநாளை கொண்டாடினர்.

இந்த விழா காவல் துறையினரும் பொதுமக்களும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கத்திலும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
பொங்கல் விழா அனைவருக்கும் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தியதாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.