விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு நோட்டு பேணா வழங்கப்பட்டது!

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு நோட்டு பேணா வழங்கிய பொறுப்பாளர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புல்லூர் ஊராட்சியில் ஆக 17 விசிக தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாள் விழா மற்றும் ஆக 15 சுதந்திர தின விழ முன்னிட்டு அங்குள்ள அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன் வாடி மையத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மங்களூர் கிழக்கு ஒன்றிய துணை அமைப்பாளரும்,ஊராட்சி மன்ற துணைதலைவருமான சுப்ரமணியன் நோட்டு,பேணா ஆகியவை வழங்கினார்.

பின்னர் மாணவர்களை நன்றாக படித்து பட்டம் பெற வேண்டும்மெனவும் அரசுத்துறையில் உயர் பதவிகளில் செல்ல வேண்டும் எனவும்,மாணவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை எப்பொழுதும் செய்வேன் என கூறினார்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பிரதாப்,உதவி ஆசிரியர்கள் செல்வி,உஷாராணி,அங்கன் வாடி ஆசிரியர் ரேவதி,கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழன் உதயம் செய்திகளுக்காக செய்தியாளர் பாசார் செல்வேந்திரன்