பாளையங்கோட்டையில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர்- தலைவர் ஜான்பாண்டியனின், 70-வது பிறந்த தின விழா!

பச்சிளங்குழந்தைகளுக்கு தங்கமோதிரம்,பரிசுப்பெட்டகம் வழங்கப்பட்டன!

திரு­நெல்­வேலி,டிச.01 தமி­ழக மக்­கள் முன்­னேற்­றக் கழகத்­தின் நிறு­வ­னர் தலை­வர்பெ.ஜான்­பாண்­டி­ய­னின், 70வது பிறந்த தின விழா, இன்று [நவ.30] பாளையங்கோட்­டை­யில் கொண்­டா­டப்­பட்­டது.இத­னை யொட்டி பாளை­யங்கோட்டை ஹைகி­ர­வுண்ட் பகு­தி­யி­லுள்ள, திரு­நெல்­வேலி அரசுமருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில்,இன்று [நவ.30] பிறந்தகுழந்­தைகள் அனை­வ­ருக்­கும், “தங்க மோதி­ரம்”அணி­விக்­கப்­பட்டது.அத்­து­டன்,குழந்­தைக­ளுக்கு தேவையான,அத்­தி­யா­வ­சிய பொருட்­கள் அடங்­கிய பரி­சுப்­பெட்­டகங்­க­ளும் வழங்­கப்­பட்டன. இவை அனைத்­தை­யும், அக்­கட்­சி­யின் திரு­நெல்­வேலி மண்­டலத் தலை­வர் கண்­ம­ணி ­மா­வீ­ரன் வழங்கி,வாழ்த்­தி­னார். நிகழ்ச்­சி­யில், மாநிலஇளை­ஞர் அணி தலை­வர் டாக்­டர் வியங்கோ பாண்­டி­ய­னும், பங்­கேற்­றி­ருந்­தார்.தொடர்ந்து, மனக்­கா­வ­லம் பிள்ளை நக­ரில்,மொத்­தம் 2 ஆயி­ரம் பேருக்கு அன்­ன­தா­னம் வழங்­கப்­பட்­டது .மேலும், நெல்லை மாநகரப் பகு­தி­க­ளில், கட்­சிக்கொடி­கள் ஏற்றி வைக்கப்­பட்டு, அந்­தந்த பகுதிமக்­க­ளுக்குமரக்­கன்­று­கள், இனிப்­பு­கள் வழங்கப்­பட்­டன. அனைத்து நிகழ்ச்­சி­க­ளி­லும், மாநிலதுணைப் பொதுச்­செ­ய­லா­ளர் அருண் பிரின்ஸ்,மாநில கொள்கை பரப்புச் செய­லா­ளர் கோபாலகிருஷ்­ணன்,”மயோபதி”மருத்­து­வர் ராம­சாமி,தலைமை நிலை­யச் செய­லா­ளர்”கல்­கு­றிச்சி” சேகர், கருங்­கு­ளம் ஒன்­றிய செய­லா­ளர் சண்­முகராஜ்,மாவட்ட இணைச் செய­லா­ளர் சின்­னத்­துரை பாண்­டி­யன், வி.கே.புரம் நகரச்செய­லா­ளர் மோகன் மள்­ளர்,மாண­வர் அணி செய­லா­ளர் பொன்­மு­ரு­கன்,மக­ளிர் கண்­மணிசர்­மிளா, நிர்­வா­கி­கள் ஆரோக்­கிய சிங்­க­ரா­யன்,ராஜேஷ் ஆகி­யோர் உட்பட, பலர் கலந்து கொண்­ட­னர்.