கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை

கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை

மாவட்ட ஆட்சியரிடம் தி.மு.க நிர்வாகிகள் மனு

திருநெல்வேலி, மே 26:

பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்காக கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் இரா. சுகுமார், I.A.S. அவர்களிடம் தி.மு.க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருநெல்வேலி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் அண்ணாச்சி திரு. இரா. ஆவுடையப்பன் அவர்கள் தலைமையில் இன்று (26.05.2026) மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இந்த மனு வழங்கப்பட்டது. மனுவில், கார் சாகுபடி பணிகள் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், தண்ணீர் திறக்கப்பட்டால் நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயனடைந்து விவசாயிகள் பெரிதும் நன்மை அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெ. செல்வ சூடாமணி, விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கி. கணேசன், கோபாலசமுத்திரம் பேரூர் செயலாளர் தி. வானுமாமலை, வீரவநல்லூர் பேரூர் செயலாளர் வி. சுப்பையா, மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணை அமைப்பாளர் சி. கிங்ஸ்லி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பி. வெங்கடேசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் எம். சுதர்சன் மற்றும் இயற்கை ஆர்வலர் என். நிவேக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.