நெல்லை மே.25
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள வேலியார்குளத்தை சார்ந்த
க. முத்துராமன் என்பவரது மகள் எம்.சுபாஷினி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் 500 க்கு 471 மார்க் வாங்கியதை கொண்டாடும் விதமாக ஊர்மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் திருவிருத்தான் புள்ளி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜேந்திரன், பஞ்சாயத்தின் 7 வது வார்டு உறுப்பினர் செல்வராஜ், சீனிவாசகன் சேவைகள் அறக்கட்டளை சமுத்திரலிங்கம் மற்றும் ஊர் தலைவர்கள் பாலு, கனகராஜ், பால்ராஜ், முத்து,சுந்தர்ராஜ் வள்ளி, மாதவன், குட்டி ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சால்வை அணிவித்து மாணவிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.






