சென்னை, செப்.04, தமிழ்நாட்டில் கள்ளுக் கடை திறக்க அரசு அனுமதிக்க வேண்டி பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் அனைத்து நாடார்சங்கங்கள்சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருந தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடைபெறற இநத ஆர்பாட்டத்தில் திருவள்ளூர்மத்திய கிழக்கு மாவட்டசெயலாளரும் முன்னாள்அமைச்சருமான பா.பெஞ்சமின், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா,தமிழ்நாடு நாடார் இளைஞர் முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் வி.எஸ். ஏமைக்கேல்ராஜ், அதிமுக இலக்கிய அணிமாநில துணைசெயலாளர் இ .சி சேகர், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கபேரவை ஏ. முத்துக்குமார மற்றும் பலர் கலந்து கொண்டனர். என்.ஆர்.தனபாலன் செய்தியாளர்ளிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் .பனைமரம் ஏறும் போது விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்தி ற்கு தலா,ரூ.10லட்சம் நிதியும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில்அரசு பணியும் வழங்கவேண்டும். பதநீர் இறக்கி விற்பனை செய்யும் மரம் ஏறும்தொழிலாளர்கள் மீது காவல்துறை பொய்வழக்கு போடுவது நிறுத்திக் கொள்ள வேண்டும் .கருப்பட்டி மற்றும் பனைப் பொருட்களை அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து ரேஷன் கடையில் விற்பனை செய்யவேண்டும் .கோவை வேளண்மை கல்லூரி உருவாக்கியுள்ள நவீன பனைமரம் ஏறும்இயந்திரத்தை பனைத்தொழிலாளர்களுக்கு அரசு இலவசமாக வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேற்றவேண்டும் என்றார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் அனைத்து நாடார் சங்கங்கள் கள்ளுக்கடையை திறக்க கோரி ஆர்பாட்டம






