தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரம் சரிபார்ப்பு: இரட்டை பதிவுகளை நீக்கும் பணி தீவிரம் !

சென்னை: தமி­ழ­கம் முழுவதும் புகைப்­ப­டம் மற்றும் வாக்­கா­ளர் விவ­ரங்­களை கொண்டு இரட்டை பதிவு­கள் நீக்­கும் பணி­கள் தொழில்­ நுட்­பங்­களை பயன்­ப­டுத்தியும் களஆய்வு மூலமும் மேற்­கொள்­ளப்­பட்டு வருவ­தாக தமி­ழக தலைமை தேர்­தல் அதி­காரி சத்­ய­பிரதசாஹூ தெரிவித்­தார். இந்திய தேர்­தல்ஆணை­யம், அடுத்­தாண்டு ஜன­வரி 1-ம்தேதியை தகுதி­ யேற்ப­டுத்தும் நாளாக கொண்டு புகைப்டத்­துடன் கூடிய வாக்கா­ளர்பட்டியல் ­திருபத்தப்­பணிகளை சமீபத்தில்­ அறிவித்­தது .அதன்­படி, கடந்த ஆக.20 முதல் வீடுவீடாகச் சென்று வாக்­குச்­சாவடி­ நிலை அலுவலர் வாக்­கா­ளர் பட்டியல் சரி­பார்த்­தல், வாக்­கா­ளர்புகைப்­பட அடை­யாள அட்­டை­யில் உள்ளமுரண்­பா­டு­களை நீக்­கு­தல், வாக்­கா­ளர் பட்டிய­லில் நல்ல தரமான புகைப்­ப­டங­களை இணைத்­தல் உள்­ளிட்ட
பணி­களை மேற்­கொண்டு வருகின்­ற­னர்.அக்டோ­பர் 18-ம் தேதி வரை இந்­தப் பணி­கள் நடை­பெறும். அதன்­பின், அக்.29-ம் தேதி வரைவு வாக்­கா­ளர் பட்டியல் வெளியிடப்­பட்டு, அன்­றிலிருந்து சிறப்பு வாக்­கா­ளர் பட்டியல் திருத்­தத்துக்­கான விண்­ணப்­பங்­கள் நவ.28ம் தேதிவரை பெறப்­ப­டும். விண்­ணப்­பங்­கள் வரும் டிச.24 தேதி குள் பரிசீலிக்கப்பட்டு 2025-ம்ஆண்டு ஜனவரி 6- ம் இறுதி வாக்கா­ளர் பட்டியல் வெளி­யிடப்­படும்.இந்நி­லையில்,தற­போது வீடு வீடாக ­­ ­வாக்­கா­ளர் பட்டியல் சரி­பார்ப்பு பணி­கள்நடை­பெற்று வருகின்­றன.இது குறித்து, தமி­ழக தலைமை தேர்­தல் அதி­காரி சத்­ய­பிரத சாஹூகூறியது: “தற்­போது,வாக்­குச்­சா­வடி நிலைஅலுவலர்­கள் வீடு வீடா­கச் சென்று, வாக்­கா­ளர்பட்டியல் சரி­ பார்ப்புபணியில் ஈடு­பட்டுள்­ள­னர்.குறிப்­பாக,புதி­தாக குடி­யே­றியவர்­கள், குறிப்பிட்ட முக­வரியில்இருந்து மாறியவர்­கள். புதி­தாக திரும­ண­மாகிச்சென்­ற­வர்­கள், வந்­த­வர்­கள், இறந்­த­வர்­கள் என்­ பது போன்ற விவரங்­க­ளைப் பெற்று, அவற்றை உரிய செயலியில் பதிவு செய்­வார்­கள். மேலும், 18வயது நிறை­வ­டைந்த வாக்­க­ளர்­கள் விவரங்களையும் பதிவு செய்து கொ­ள­வார்­கள்,இது தவிர, புகைப்­படம் ­சரியில்லை எனில் அவற்றை மாற்கானவதற்கான பணி­க­ளையும்­ மேற்­கொள்­வார்­கள்.அப்­போது, வரைவு வாக்­கா­ளர் பட்டியல் வெளி­யிட்­ட­பின் வாக்­கா­ளர் பட்டியலில் பெயர் சேர்த்­தல், நீக்­கம் செய்­தல், முக­வரி மாற்­றம் செய்­தல் போன்­ற­ வற்றை மேற்­கொள­வது குறித்தும் , விண்­ணப்பிப்­பது குறித்­தும் அறிவுறுத்தி வரு­வார்­கள்.வாக்­கா­ளர்­களை நேரில் சந்தித்து விவரங்­கள்பெற வேண்­டும் என்­ப­தற்­கா­கவே இரண்டு மாத அவ­கா­சம் அளிக்­கப்­பட்டுள்­ளது. இப்­ப­ணி­கள் முடிந்து,அக்.29-ம் தேதி முதல் அடுத்த கட்­ட­மாக வாக்­கா­ளர் பட்டியல் திருத்­தப்­ப­ணி­கள் தொடங்­கும்.இதுமட்டுமின்றி, தற்­போது மக்­க­ளவை தேர்தல் முடிந்டதுள்ள நிலையில், மாநிலத்துக்குள்,இரட்டை பதிவுகளை­,நீக்­கும் பணி­க­ளும் நடைபெற்றுற­ வருகின்டறன. குறிப்­பாக, புகைப்­பட ஒற்றுமை, பெயர், தந்தைபெயர், வசிப்பிடம், பிறந்ததேதி, வயது இவற்றின் ஒற்றுமை அடிப்­ப­டை­யில், கணினி வாயிலாக ஒத்துப்­போ­கும் வாக்­கா­ளர்­கள் விவரங்­கள் எடுக்­கப்­பட்டு, அவை ஆய்வு செய்­யப்­பட்டுவருகிறது.அவ்­வாறு ஒருவரது பெயர் இரு வேறு இடங்­ க­ளில் இருப்­பது கண்­ட­றியப்­பட்­டால், சம்­பந்­தப்­பட்ட வாக்­கா­ள­ருக்கு கடி­தம் வாயிலாக தெரி­விக்­கப்­பட்டு, அவர் விரும்பும் இடத்தில் வாக்­கா­ளர் பட்டியலில் பெயர் இருக்­கும் வகை­யில், மற்­றொரு இடத்தில் நீக்­கப்­ப­டும். தேர்­தல்nஆணை­யத்­தைப் பொறுத்­த­வரை, யாரு­
டைன பெயரையும்  உடனடியாக நீக்கி விடக்கூடாது என்பதை அறி வுறுத்தியுள்ளது. அதன்படி முதலில் கடிதம் அந்த கடிதத்திற்கு 15 நாட்களுக்குள் பதில் வராத பட்சத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் கள ஆய்வு ஆகியவற்றுக்கு பின்னர் வாக்காளர் அனுமதி பெற்றே நீக்கம் செய்யப்படும். மாநிலத்துக்குள் இது போன்ற பணிகளை முடிக்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது இவ்வாறாக கூடுதல் பதிவுகளை நீக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது ஒவ்வொரு முறையும் புதிய தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டு வாக்காளர் பதிவுகள் ஆய்வுக்கு பின் சம்மதம் பெற்று நீக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்