உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஆய்வு செய்து பத்திரிகைகளை சந்தித்து பேட்டி அளித்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அதில் அவர் கூறியதாவது அக்டோபர் 2 காந்தி அடிகளின் பிறந்த நாளான அன்று ஆகவே அந்த நாளில் மதுவிலக்கு அவரது உயிர் மூச்சு அந்த கோரிக்கையை வலியுறுத்தி மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறுகிறது இந்த மாநாட்டில் தோழமைக் கட்சிகள் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றனர் மேலும திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் காங்கிரஸ் கட்சி சார்பில் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா பங்கேற்று உரையாற்ற உள்ளார் தமிழ்நாடு அரசுக்கு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் கடைகளை மூட வேண்டும் மதுவிலக்கு தொடர்பான தரப்புறைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் மது கடைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிற தொழிலாளர்களுக்கு வேறு பணி வழங்க வேண்டும் என்றும் அரசாங்கமோ கட்சிகளோ இந்த மதுவை ஒழிக்க முடியாது பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே ஒழிக்க முடியும் என்றும் கூறினார்






