பெருமுளை அரசு மதுபானக் கடையில் 50 பாட்டில்கள் வாங்கியவர் கைது – திட்டக்குடி போலீசார் நடவடிக்கை

பெருமுளை அரசு மதுபானக் கடையில் 50 பாட்டில்கள் வாங்கியவர் கைது – திட்டக்குடி போலீசார் நடவடிக்கை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெருமுளை அரசு மதுபானக் கடையில் அதிகளவில் மதுபானம் வாங்கிச் சென்ற நபரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொடிக்களம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (66), தந்தை பெயர் பெரியசாமி, பெருமுளை அரசு மதுபானக் கடையில் 50 மது பாட்டில்களை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் எஸ்ஐ பாக்யராஜ் தலைமையிலான போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, காமராஜை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.