ஸ்ரீமுஷ்ணம் அருகே நந்தீஸ்வர மங்கலம் கிராமத்தில் மழை நீர் சூழ்ந்து கொண்ட அவல நிலை இரவு நேரங்களில் விஷ பாம்பு வீடுகளில் புகுவதால் குடியிருப்பு வாசிகள் அச்சம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் தொடர் மழை காரணமாக மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து மழை நீர் வடிவதற்கு வழி இல்லாமல் வீடுகளில் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் இரவு நேரங்களில் கொடியபாம்பு வீடுகளில் வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர் இதனை பலமுறை ஊராட்சி செயலரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதோடு வீதிகளில் திருவிளக்கும் எரியவில்லை என பொதுமக்கள் சரமாரியாக குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது இதனால் அரசு அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தனர்






