அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு – உற்சாக வரவேற்பு
அம்பாசமுத்திரம், மார்ச் 29:
அ.இ.அ.தி.மு.கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அம்பாசமுத்திரம் தொகுதிக்கான அ.இ.அ.தி.மு.க வேட்பாளராக டாக்டர் இசக்கி சுப்பையா (M.A., M.L., PhD) அவர்களை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளரான டாக்டர் இசக்கி சுப்பையா அவர்கள், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார்.
அவரது வருகையை முன்னிட்டு கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், வெள்ளங்குளி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சிவந்திபுரம், விகேபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களும் கட்சித் தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர்.
பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து, முகமலர்ச்சியுடன் வேட்பாளரை வரவேற்ற பொதுமக்கள், வரவிருக்கும் தேர்தலில் வெற்றியை நோக்கி உறுதியுடன் செயல்படுவோம் என தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளதை வெளிப்படுத்துகிறது.






