பத்தமடை ஜமாத்தில் ஒருமனதாக தலைவர் தேர்வு – சமூக முன்னேற்றத்தில் புதிய சாதனைகள்
பத்தமடை: பத்தமடை ஜமாத்தின் தலைவராக கும்பகோணம் கொடை வள்ளல் ஹாஜியார் கே.என்.டி. செய்யது மீரான் அவர்கள் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் பத்தமடை சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் ஜமாத் தலைவர் தலைமையில், ஜமாத்தார்களும் ஊர் இளைஞர்களும் இணைந்து பத்தமடையில் சிறப்புமிக்க இஸ்திமா மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினர். இந்த நிகழ்வு பல ஊர் ஜமாத்தார்களின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், நூற்றாண்டு பழமையான மதரஸா கட்டிடம் இடிக்கப்பட்டு, ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முழுவதும் உள்ளூர் ஜமாத்தார்களும் வெளிநாடுகளில் வசிக்கும் சொந்தங்களும் இணைந்து செய்த உதவியால், வெளியூர் நன்கொடைகள் இன்றி நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மதரஸாவில் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மார்க்கக் கல்வி பயின்று வருகின்றனர். இதனுடன் 26 ஆலிமாக்கள், 3 பள்ளிகளில் 6 இமாம்கள் மற்றும் 3 பிலால்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பத்தமடை ஜமாத்தின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பால், எதிர்காலத்தில் மேலும் பல முன்னேற்றங்கள் நடைபெற இறைவனை வேண்டுகிறோம் என பத்தமடை கே.வி. மலுக்காமலி தெரிவித்துள்ளார்.






