ராதாபுரம், மார்ச் 24:
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலாத்திகுளம் கிராமத்தில், வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாரம்பரிய கலைகளான கும்மி நடனம் நடத்தப்பட்டது. மேலும், பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு மெஹந்தி போட்டி மற்றும் ரங்கோலி (கோலம்) போட்டிகள் மூலம் வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள், “ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்” என்பதை வலியுறுத்தி, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி கிராம மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






