கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது

கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றத
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
இந்த சிறப்புத் தொழுகையை பள்ளிவாசல் இமாம் அ. தாஜூத்தீன் நடத்தினார். நிகழ்ச்சியில் நூருல் ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மு. ரஹ்மத் ரபீக் ரமலானின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
இத்தொழுகையில் ஜமாத் தலைவர் அ. நாகூர்கனி, செயலர் அ. ஷேக்செய்யது அலி, பொருளாளர் என். அஜிஸ், துணைத் தலைவர் அ. நாகூர் மீரான், தணிக்கையாளர் கே.பி.எஸ். முகம்மது உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிவில், அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், ரமலான் நோன்பு கஞ்சி மற்றும் சஹர் உணவு வழங்கிய நலத்திட்டத் தொண்டர்களுக்கு சிறப்பு பாராட்டு மற்றும் கௌரவமும் அளிக்கப்பட்டது.