நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் தமுமுக சார்பில் ஃபித்ரா விநியோகம்
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் ரமலானை முன்னிட்டு ஃபித்ரா விநியோக நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (17.03.2026) இரவு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமுமுக நெல்லை மாவட்ட துணைத் தலைவர் வீரை பி. நவாஸ் ஷரீப் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்டத் தலைவர் கே.எஸ். ரசூல்மைதீன் எம்.சி., ஏழை எளிய மக்களுக்கு ஃபித்ரா வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் சேக் மதார், மாவட்ட பொருளாளர் ராஜா முகம்மது, ஊடக அணி மாவட்ட பொருளாளர் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஃபித்ரா வழங்கினர்.
மேலும், நகரத் தலைவர் ஜாகிர் உசேன், நகர துணைத் தலைவர் செய்யது அலி, நகர செயலாளர் அசன் மைதீன், மமக நகர செயலாளர் ஆசிக் இலாஹி, நகர பொருளாளர் சாகுல் ஹமீது, நகர துணைச் செயலாளர் கோதர் செய்யது அலி, அமீர் மில்லத், 14வது வார்டு கிளைத் தலைவர் கோதர் இப்ராஹிம், தெற்கு பாரதி நகர் கிளைத் தலைவர் அல்லா பிச்சை உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
ரமலான் பெருநாளை முன்னிட்டு ஏழை குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ஒரு குடும்பத்திற்கு ரூ.600 மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய், நெய், மசாலா பொருட்கள், வெங்காயம், தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
மொத்தம் 100 ஏழை எளிய குடும்பங்களுக்கு ரூ.60,000 மதிப்பிலான ஃபித்ரா பொருட்கள் வழங்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.






