“நான் திமுக உடன் கூட்டணி வைக்கவோ, இணையவோ மாட்டேன்” – ஓபிஎஸ் விளக்கம்!

சென்னை: ஆக.4 – “நான் திமுக உடன்கூட்டணி வைக்கப் போவதா கவும்,அக்கட்சியில் இணையப் போவதாகவும் பரவும் தகவலில் எள்ளளவும் உண்மையில்லை” எனமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்   செல்வம் கூறியுள்ளார். அண்மை யில் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார் ஓபிஎஸ். அதோடு தேசிய ஜனநாயக கூட்டணி யில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தலைமை யிலான அதிமுக தொண் டர்கள் உரிமை மீட்பு குழு அறிவித் தது. அடுத்தஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது அரசியல் ரீதியாக பேசு பொருளானது. இது குறித்து திமுக கூட்டணிகட்சிகள் மற்றும் அதிமுக,பாஜக கூட்டணி கட்சியினர் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று (ஆக.4) ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,“ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பிய வர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும் ,உயிரிழந்தவர்களின் உறவினர் களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு. இந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன். இதே பாேன்று அவரது மூத்த சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்துஇரங்கல் தெரிவித்தேன். இந்தச் சந்திப்பு தமிழ்ப்பண்பாட்டின் வெளிப்பாடு. என்னுடைய மனைவியும், என்னு டைய தாயாரும் இறந்த போது, என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் முதல்வர் ஸ்டாலின் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.இந்தச்சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம் பெறவில் லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆனால், இந்தச் சந்திப்பை வைத்து என்னை திமுகவின் ‘பி’ டீம்  என்றும், நான் திமுக உடன் கூட்டணிவைக்கப் போவதாகவும்,திமுகவில் இணை யப்போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாகபரப்பும் நடவடிக்கை களை சிலர் மேற் கொண்டு வருகின் றனர்.பத்திரிகைகள் மற்றும் ஊட கங்களும் இதுகுறித்த செய்திகளை கற்பனையாக வெளியிட்டு வருகி ன்றன. இதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதைத்தெரிவித்துக் கொள்கிறேன்.என்னைப் பொறுத்த வரையில்,முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் பயணிப்பவன். 2026- ம்ஆண்டு நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க வேண்டு மேன்பது தான் எங்களின் நோக்கம் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதையும் உறுதி படத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ப் பண்பாட்டை நிலை நிறுத்தும் வகையில் நான் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தேனே தவிர, இதில் துளியும் அரசியல் ஏதுமில்லை. இதனை வைத்து அரசியல் ஆதயம் தேட நினைப்பவர்களைப் பார்க்கும் பேரது, முன்னாள் முதல்வர் அண்ணாவின் பெரன் மொழியான‘ பண்பு தெரிந்த வர்கள் பாராட்டுகிறார்கள். அது இல்லாதவர்களைப்பற்றிக்கவலைப் பட வேண்டாம்’ என்பது தான் என்நினைவிற்கு வருகிறது. அடுத்த படியாக, சமக்ராசி க்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நிதியை நான் ஏதோ இப்போது தான் வெளியிடுவது போல சில விமர்சனங்கள் எழுகின்றன. இது முற்றிலும் தவறு. சமக்ராசி க்ஷா திட்டத்திற்கான நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி 29-08- 2024  அன்றே அறிக்கை வெளியிட்டவன் நான். இதை போன்று ,தந்தை பெரியார் மற்றும் அண்ணாவைப் பற்றி விமர்சித்து பேசிய இந்து முன்னணிக்கு கண்டனம்  தெரிவித்து 25- 0 6- 2 0 25 அன்று அறிக்கை வெளியிட்டவன் நான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வை பாரதியஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் விமர்சித்த போது அதற்கு கண்டனம் தெரிவித்து 12-06-2023 அன்று அறிக்கை வெளியிட்ட வன் நான். இதே போன்று, இரு மொழிக் கொள் கைக்கு ஆதரவாக என்னுடைய கருத்தை பதிவு செய்துஇருக்கிறேன். இஸ்லாமிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வக்புவாரிய சட்டத் திற்கு எதிராக மாநிலங்கள வையில் வாக்களிக்க உத்தரவிட் டேன். நான் எங்குஇருந்தாலும், தமிழக மக்களின் உரிமை,தமிழக மக்களின் நலன் என்று வந்து விட்டால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல் படக் கூடியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.