சேரன்மகாதேவி, மார்ச் 5:
சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக “ஜேஸிகா வாகன காப்பகம்” எனும் 24 மணி நேர பாதுகாப்புடன் கூடிய வாகன நிறுத்தும் வசதி இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

ரயில் பயணிகள் தங்கள் இரு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு பயணம் செய்யும் வகையில் இந்த வாகன காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் சேரன்மகாதேவி ரயில்வே அதிகாரி பேச்சு முத்து மற்றும் வழக்கறிஞர் சி. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாகன காப்பகத்தை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தொழில் அதிபர் ஜி. செல்வசுந்தரசேகர், சமூக ஆர்வலர் பாவூர்சத்திரம் கே. பாலசுப்பிரமணியன், அருவி அறக்கட்டளை ஜி. மைக்கேல், எக்ஸ் ரயில்வே எம். சூரியன், வி.சி.க. அம்பை சட்டமன்ற துணை செயலாளர் ஆர். அழகேசன், கார்த்திக் குமார், அச்சன்புதூர் திமுக எம். நாகூர் மீரான், புகைப்படக் கலைஞர் ஆர். ரவீந்திரன், பி.எஸ்.பி. மாவட்ட துணைத் தலைவர் ஆசு நைனார், பாவூர்சத்திரம் சுதர்சன் திருமலை, பி.எஸ்.பி. அம்பை சட்டமன்றத் தொகுதி தலைவர் ஏ. ராம்குமார், ரவிச்சந்திரன், ராஜன், வெண்ணிலா சுப்பு, ஹபீப், ஏ. ஜீவா, எஸ். பிரியதர்ஷினி மற்றும் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த வாகன காப்பகத்தில் உங்கள் 2, 3 மற்றும் 4 சக்கர வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து பயனடையலாம் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புக்கு:
ஜேஸிகா வாகன காப்பகம்
📞 94429 07990






