உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனளிகள்: ஜுலை 1 முதல் விண்ணப்பம்

சென்னை, ஜூன் 21: உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி களுக்கு நியமனப் பதவி அளிப்ப தற்கான விண்ணப்பம்  நடை முறைகள் ஜீலை 1-இல் தொட ங்கும் ஏன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.ஊள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவிகளை வழங்கு வதற்கான சட்டம் கொண்டு வந்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகளின்
அமைப்புகள் சார்பில் சென்னையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. புதுப்பிக்கப் பட்ட  வள்ளுவர் கோட்டத்தில் நடை பெற்ற முதல் விழாவான அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:என்னைப் பாராட்டிப் பேசியபோது, அதை யெல்லாம் பாராட்டாக ஏடுத்துக் கொள்ள வில்லை.என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் உழைப்பதற்கான ஊக்கமாக எடுத்துக் கொண்டுள்ளேன். கோரிக்கைகளை வேண்டு  காேளாகக் கூறியுள்ளீர்கள்.என்றும் உங்களில் நான் ஓருவன். உங்களுக்கான கோரிக்கைகள் ஆனைத்தையும் நிச்சயம் படிப்படி யாக நிறைவேற்றியே தீருவேன். நான் என்று சொல்வதை விட,”நாம்’ என்ற சொல்லுக்கே வலிமை அதிகம். அதனால் தான் எல்லாேரு க்கும் எல்லாம் என்று பொருள்பட திராவிட மாடல் ஆரசு என்று
அரசுக்கு பெயர் வைத்தேன். திராவிட மாட ல் என்றால் சமூக நீதி, சமத்துவம், சமதர்மம், சகாேதரத்து  வத்தைக் காக்கக் கூடிய ஆரசாகும். ஏழை, எளியவர்கள், ஓடுக்கப் பட்டாேர், விளிம்பு நிலை மக்கள், பெண்கள், முதியாேர், திருநர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர் என அனைவரை யும் உள்ளடக்கிய அரசாகும். மாற்றுத்திறனாளி களுக்கு உள்ளாட்சி அமைப்பு களில் நியமனப் பதவி அளிப்பது என்பது அரசியலுக்காக, தேர்தலுக்காக செய்ததில்லை. உள்ளார்ந்த அன்புடன் செய்ததாகும்.சமூக நீதி ஊரிமை: மா ற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்து செயல் பட்டு வருகிறோம். உங்களுக்கான (மாற்றுத்திறனாளிகள்) கோரிக்கயை நீங்களே ஒலிக்க வேண்டும் என்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி உறுப்பினர் இடம் பெறுவார் என்ற மாபெரும் சமூக நீதி உரிமையை      சட்ட மாக்கியுள்ளாேம். இதன் மூலம், 13 ஆயிரத்து 357 மாற்றுத் திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 பேரும், ஊரக உள்ளாட்சி அமைப்பு களில் 2,984 மாற்றுத்திறனாளி களுடம் நியமிக்கப்படுவர். இதற்கான விண் ப்பங்கள் மாவட்ட வாரியாக ஜீலை 1 முதல் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும். இதற்கென மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமை க்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவில் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளி குழுவைச் சேர்ந்த ஓருவர் இடம்பெற்றிருப்பார். நியமனம் செய்யப் பட்ட ஊறுப்பினர்கள் மன்றக் கூட்டங்களில் பங்கேற்கலாம். உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு வழங்கப்படுவது போன்று மாற்றுத்திறனாளி நிய மன உறுப்பினருக்கும் மதிப்பூதியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி களின் வாழ்வு வளம்பேற ஏராள மான திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறேம்.சிலருக்குப்பிடிக்கவில்லை:
மாற்றுத்திறனாளிகளுக்காக சாதனைகளைச் செய்துள்ளாேம்.இன்னும் செய்வாேம். மாற்றுத் திறனாளி சங்கங்களைச்சேர்ந்த பிரதி நிதிகள், அரசுடன் இணைந்து செயல் பட வேண்டும்.நாம் அனைவரும் இணைந்துஓருங்கிணைந்த சமூகமாக நாம் வளர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அனைத்துத்துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருக்கிறார் கள். உயர்ந்த இடங்களை அடைந்துள்ளனர். சமூகத்தடை களை உடைத்து முன்னேறி வருகிறார்கள்.அவர்கள் அனைவருக் கும்பாராட்டுகள். உங்களுக்கு நான் இருக்கிறேன். இந்த அரசு இருக்கிறது என்று எண்ணிச் செயல் படுங்கள். உங்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்குவது எனது கடமை. இது அனைவருக்கு மான ஆட்சி. அனைவரையும் முன்னேற்றும் ஆட்சி. இதனை சில வகுப்பு வாத சக்திகளால் அவர்களுக்குத் துணை பாேகும் கொத்தடிமை கூட்டத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எல்லாேரும் முன்னேறுவது சிலருக்குப் பிடிக்க வில்லை. அனைவருக்கும் சமூக நீதி, சமத்துவம் கிடைக்கக் கூடாது என்று நினைக்கும் வகுப்பு வாதிகள் தான் திமுக அரசு மீது பாய்கிறார்கள். அதனை அரசியல் களத்தில் முறியடிக்கக்கூடிய வலிமையை தரக் கூடியது நீங்கள், மக்களும் தந்து கொண்டிருக்கக் கூடிய அன்பு தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முன்னதாக, டிசம்பர் 3  இயக்கத்தின் தலைவர் தீபக்நாதன், தேசிய மாற்றுத்திறனாளிகள் இணையத்தின் தலைவர் அர்மான் அலி தமிழ் நாடு மாற்றுத்திறனாளி கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சிம்ம சந்திரன், தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள், பாது காப்பு உரிமைகளுக் கான சங்கத்தின் நிர்வாகி ஜான்சிராணி, தமிழ் நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் கோபி நாத், தமிழ் நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர்   தங்கம் ஆகியாேர் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டிப் பேசினர். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, மு.பெ. சாமிநாதன், பி.கீதா ஜீவன், ஆர். எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, மாநகராட்சி மேயர் ஆர். பிரியா உள் பட பலர் விழாவில் பங்கேற்றனர்.