கூனியூரில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 73வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் .

கூனியூரில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 73வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கூனியூர், மார்ச் 1:
தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகம் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் விழா கூனியூர் இணைக் கழகத்தின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பொறியாளர் அணி சார்பில் இசக்கிமுத்து பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூனியூர் பஞ்சாயத்து தலைவர் முத்துகிருஷ்ணன், கிளைச் செயலாளர் திருமலை நம்பி, குட்டி, ஆறுமுகம், வன்னிய ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் பெருமளவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

 

 

சிறப்பு அழைப்பாளர்களாக சேரை நகரச் செயலாளர் மணிஷா செல்வராஜ், தொ.மு.ச துணைப் பொது செயலாளர் கணேசன், தலைவர் இரா. பழனி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, அனைவரும் ஒருமித்தமாக முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இவ்விழா உற்சாகமான சூழலில் நடைபெற்றது.