பெங்களூரு, செப்.19 கர்நாடகா முதல் மந்திரி சித்தரமையா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் பின்னடைவை சந்தித்ததால் பாஜக தலைவர்கள் இப்போது எங்கள் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகின்றனர். இந்தத் தேர்தலில் நாங்கள் 100 தொகுதிகளை நெருங்கி விட்டோம் விரைவில் மத்தியில் ஆட்சியமைப்போம். நரேந்திர மோடி 5 ஆண்டுகள் நிறைவு செய்து செய்ய மாட்டார். எதிர்காலம் குறித்த கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மத்தியில் உள்ள அரசியல் சூழ்நிலைகளில் அடிப்படையில் நான் இதை சொல்கிறேன். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவால் பிரதமர் பதவி மோடி நீடிக்கிறார். அவர்கள் எந்த நேரத்திலும் ஆதரவை திரும்ப பெறலாம். அதன்பின்னர் என்ன நடக்கும்? எங்களுக்கு கிடைத்த தகவல் மற்றும் அரசியல் முன்னோட்டங்களை வைத்து பார்க்கையில்,இந்த அரசு (மத்திய அரசு)தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யும் என நான் நினைக்கவில்லை. கடந்த சில நாட்களாகவே ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தலைவர்கள் கடுமையாக தாக்கி பேசுகின்றனர். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி அவரது செல்வாக்கை சீர் குலைக்கும் நோக்கத்துடன் அவரை குறிவைக்கின்றனர். இந்த மிரட்டல் உருட்டர்களால் ராகுல் காந்தி பணிய வைக்க முடியாது. இவ்வாறு சித்தர் ரம்யா கூறினார்.
மத்தியில் இந்தியா கூட்டணி விரைவில் ஆட்சியமைக்கும்- சித்தராமையா கணிப்பு!






