கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இணைந்து ஆர்ப்பாட்டம்.!

கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இணைந்து ஆர்ப்பாட்டம்.!

அண்மையில் திண்டுக்கல் மாநகரில் பேகம்பூர் தபால் நிலையம் அருகே “அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும், கிறிஸ்துவ மக்கள் முன்னணி யும், தோழமை அமைப்புகளும் இணைந்து..,
ஒடிசா மாநிலம் தென்கனல் மாவட்டத்தில் கிறிஸ்துவ பாதிரியாரை தாக்கி அவரது வாயில் மாட்டு சானத்தை திணித்து அராஜகம் செய்த பாசிச சங்பரிவார் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மீது வடமாநிலங்களில் தொடர் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்தும், நாடெங்கிலும் சிறுபாண்மை மக்களின் மதவழிப்பாட்டை உறுதிபடுத்த கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் கிறிஸ்துவ மக்கள் முன்னணி நிறுவன தலைவர்:சிறுநாயக்கன்பட்டி மரிய ஆரோக்கியம், மஜ்லீஸ்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரியாஸ் அகமது, ஆகியோர் கண்டன பேருரையாற்றினார்கள் இறுதியில் ஆரோக்கியதாஸ் அவர்கள் நன்றியுரை கூறினார். ஆர்பாட்டத்தில் முஸ்லீம் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது இந்து மத தோழமை உறவுகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்திகளுக்காக:பெ. எலியாஸ், உதவி ஆசிரியர்(தமிழன் உதயம்)