கடலூர், ஜூலை, 09: கடலூர் மாவட்டம்,செம்மங்குப்பத்தில் நேற்று (8-7-2025) காலை நிகழ்ந்த இரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின்பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி நிதியுதவி அறிவித்துள்ளார் அவர் தனது அறிக்கை யில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம்,செம்மங்குப்பத்தில் நடந்த மோசமான இரயில் விபத்தில் விலை மதிப்பில்லாத இரண்டு இளம் பிள்ளைகளின் உயிர் பறிபோன செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.வாழ வேண்டிய வயதில் உயிரிழந்த
அந்தத்துளிர்களின் மரணம் என்னை ஆற்றொன்னாத்துயரில் ஆழ்த்துகிறது.விபத்தில் உயிரிழந்த
நிமிலேஷ் (வயது 12) மற்றும் சாருமதி (வயது 16)ஆகிய இருவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தி
னருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்விபத்தில் காயமடைந்து கடலூர்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு நபர்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளித்திடவும் அறிவுறுத்தியுள்ளேன்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து இலட்சம் ரூபாய்
வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு
இலட்சம் ரூபாயும், இலேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டிருந்தார் இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாருமதியின் சகோதரனும் மரணம் அடைந்தார் அவருக்கும் நிதி உதவி அளிக்கப்படுகிறது.முன்னதாக,கடலூர் – செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை (கேட் எண்170)நேற்று காலை மாணவர்களுடன் பள்ளி வாகனம் கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்துமயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் (வண்டி எண் 56813) மோதியது. இந்த விபத்தில் ரயில் மோதியதில் பள்ளி வாகனம் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள மக்கள் பதட்டத்துடன் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர்.வேன் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்த மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.அப்போதுதான் தண்டவாளத்தில் ஒரு மாணவரின் உடல் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடல் சிதறிபலியான அந்த மாணவரின் பெயர் நிவாஸ்.இவன்6-ம்வகுப்பு படித்து வந்தான்.வேனுக்குள் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டபோது சாருமதி என்ற மாணவி உடல் நசுங்கி பலியாகி இருப்ப து தெரிந்தது. இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.உடனடியாக மாணவன் நிவாஸ் உடலும்,மாணவி சாருமதி உடலும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. செழியன் (வயது15),விஸ்வேஸ்(16) உட்பட3 மாணவர்களும் படுகாயங்களுடன் வேனுக்குள் ரத்த வெள்ளத்தில்கிடந்தனர்.அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர்.அதில் செழியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்த கோர விபத்தில் உயிரிழந்த சாருமதியும் செழியனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி என்பதுமிகவும் சோகமாகும்.கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திராவிடமணி என்பவரின் மகள் சாருமதி,மகன்செழியன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் இரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் மற்றும் நிதியுதவி!






