புதுக்குடி,
25.01.2026.
திருநெல்வேலியில் புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் சேரன்மகாதேவி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குடி பேருந்து நிலையம் அருகில் மாலை 6:00 மணி அளவில் தமிழ் மொழிக்காக

உயர் தியாகம் செய்திட்ட மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நெல்லை புறநகர் மாவட்ட கழக செயலாளர் அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா வருகை தந்து தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கழக செய்தி தொடர்பாளர் அதிவீரராம பாண்டியன், கழக இளம் பேச்சாளர் பெவின் குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
இதில் முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ராகவன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் சிவன் பாபு, சேரை ஒன்றிய கழக செயலாளர் மாரி செல்வம், அம்பை ஒன்றிய கழகச் செயலாளர் விஜய பாலாஜி, அம்பை ஒன்றிய கழகச் செயலாளர் பிராங்கிளின், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரிய பெருமாள், அம்மா பேரவை செயலாளர் காமராஜ், நகரச் செயலாளர் வி கே புரம் கண்ணன், சேரன்மகாதேவி வக்கீல் பழனிக்குமார், களக்காடு ஜோசப், புதுக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் சுப்பிரமணியன் சிறப்பாக செய்திருந்தார்.






