டாக்டர் பி.ஆர்,அம்பேத்கர் இளைஞர் அணி நடத்தும் பொங்கல் விளையாட்டு விழா
சேரன்மகாதேவி,
கூனியூர் திருவள்ளுவர் தெரு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இளைஞர் அணியினர் நடத்தும் 40வது பொங்கல் விளையாட்டு போட்டி 17.01.2026 சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அம்பேத்கர் உருவப்படத்திற்கு கூனியூர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.முத்துகிருஷ்ணன், கூனியூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன், TNEB மின் ஊழியர் தொழிற்சங்க கூட்டத் தலைவர் பி.வி.ராஜ், எம்.முத்தையா மேலக்கூனியூர், தலைவர் எம்.மாதவன் ஆகியோர் மாலை அணிவித்து விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தனர்.
விழாவை தொடங்கி வைத்தவர்களுக்கு கோவை.கே.சரவணன், LG AC சர்வீஸ் எம்.அருண் அவர்கள் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்கள்.
மேல கூனியூர் வி.ஆனந்தராஜ் அவர்கள் விழாவிற்கு வருகை தந்தவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.
காலை 9:00 மணி

முதல் மாலை 7.00 மணி வரை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாலை 7.30 மணி முதல் 10 மணி வரை பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கூனியூர் அதிமுக மாவட்ட இலக்கிய செயலாளர் பி.மாடசாமி, திமுக சேரை ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு, ஒன்றிய பெருந்தலைவர் திருமதி எஸ்.பூங்கோதை குமார், டாக்டர் ஜெ.ராமசாமி மயோபதி காப்பகம்., தமிழ்நாடு வியாபாரி சங்க பேரவை மாநில தலைமை ஆலோசகர், திமுக செரை நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், TNEB தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க செயலாளர்

எம்.மாதவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் திரு.பாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வி.மாதவன், உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் இருளப்பசாமி, மாவட்ட திமுக மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இசக்கிமுத்து பாண்டியன் என்ற ஐயப்பன், உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் துணை செயலாளர் ISRO ஆர்.டி.கே.இசக்கி முத்து, மேல கூனியூர் ஆடிட்டர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் விழாவில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
விழாவின் நிறைவாக கோவை திரு.கே.சரவணன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
விழாவிற்கு ஒலி ஒளி அமைத்துக் கொடுத்து சிறப்பித்தவர்கள் வி.கிருஷ்ணன் வெண்மதி சவுண்ட் சர்வீஸ்,டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அணி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பித்தனர்.







