ஸ்காட் சர்வதேச பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமரிசை
Tamil Monthy Magazine and News Channel
இந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் அனைவரும் தமிழர் மரபுக்கு உரிய பாரம்பரிய உடைகளை அணிந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பள்ளி வளாகம் முழுவதும் கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகையின் பாரம்பரிய களையுடன் விழா நடைபெற்றது.
இப்போட்டிகளில் மாணவ, மாணவியர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு விழாவை மகிழ்ச்சியாக மாற்றினர்.
இந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்காட் சர்வதேச பள்ளியின் முதல்வர் திருமதி கல்பனா அவர்களின் தலைமையில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழா மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தமிழர் மரபு மற்றும் பண்பாட்டை நினைவூட்டும் வகையில் சிறப்பாக நிறைவு பெற்றது.