வீரவநல்லூர் வாசகர் வட்டம் மற்றும் அம்பாசமுத்திரம் கிழக்கு சுழற் கழகம் இணைந்து நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நூலக அரங்கில் வைத்து வாசகர் வட்ட தலைவர் பீ. ஆதம் இலியாஸ் தலைமையில் கவிஞர் உலகநாதன் வாசகர் வட்ட செயலாளர் சந்திரசேகர் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் முன்னிலையில் நடந்தது.
துரைராஜ் வரவேற்று பேசினார் ஆசிரியர் சேவைக்காக சீ. செந்தில் வேல் க்கும் மருத்துவ சேவைக்காக ரா அகத்தியனுக்கும் கோ.சங்கருக்கும் சமூக சேவைக்காக ஆ. லூர்து ராஜ்க்கும் சுகாதார சேவைக்காக. சி. கணேசனுக்கும் சிறந்த தொழில் சேவைக்காக சரவணனுக்கும் நூலக சேவைக்காக திருநீற்று செல்வனுக்கும் வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் விருது பெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பேசினார்.
அம்பாசமுத்திரம் கிழக்கு கழக ஆலோசகர் சீ. இசக்கி சரவணன் செயலாளர் பா. பரமசிவன் வேட்டை நூலக வாசகர் வட்ட தலைவர் மதார் முகையதீன் வாசகர் வட்ட பாத்திலிங்கம் மா. முத்துராமலிங்கம் பெருமாள் ச.பி. ராமன் கவுன்சிலர் அனந்தராமன் வெங்கடேஸ்வரி யோகா மாஸ்டர் வெங்கடேஷ் வைரவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற ஆழ்வை மாடசாமி அம்பாசமுத்திரம் கிழக்கு சுழற்கழக ஐபிபி எஸ். நவ மணி ஆகியோர் பாராட்டும் ஏற்புறையும் ஆற்றினார்கள் வாசர் வட்ட ஒருங்கிணைப்பாளர் இராபழனி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் நூலகர் ந. குமாரி நன்றி கூறினார்






