திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டம்
மின் சிக்கன வார கருத்தரங்க விழா
மின் சிக்கன வார கருத்தரங்கம் விழா சேரன்மகாதேவி ஸ்காட் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று 22.12.25 மாலை 2.30 மணி அளவில் மேற்பார்வை பொறியாளர் திருநெல்வேலி திருமதி அகிலாண்டேஸ்வரி அவர்களின் உத்தரவின் அடிப்படையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கம் கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் திரு சுடலையாடும் பெருமாள் அவர்கள் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் சேரன்மகாதேவி உதவி செயற் பொறியாளர் திரு சந்திரன், அம்பை உதவி செயற்பொறியாளர், திரு மகேஷ் சுவாமிநாத், கல்லிடைக்குறிச்சி உதவி செயற்பொறியாளர் திருமதி சாந்தி, உதவி செயற் பொறியாளர் திருமதி ராமலட்சுமி, திரு பெருமாள் ,தலைமை ஆசிரியர் பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி சேரன்மகாதேவி, திரு மொனிமாறன் முதல்வர், ஸ்காட் தொழில் நுட்பக் கல்லூரி, சேரன்மகாதேவி, திரு நைனா முகமது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், சமூக
ஆர்வலர் திரு கச்சி மைதீன், திரு ஜமால்தின், திரு கைலாசமூர்த்தி உதவி பொறியாளர் சேரன்மகாதேவி, திரு பிரம்ம நாயகம் உதவி பொறியாளர் முக்கூடல், ரவிச்சந்திரன் உதவி பொறியாளர், கோபாலசமுத்திரம், பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, மகளிர் அரசு உயர்நிலை பள்ளி ஸகாட் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சேரன்மகாதேவி உபகோட்ட மின்வாரிய பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மின் சிக்கன கருத்தரங்க விழாவை சிறப்பித்து தந்தனர். இவ்விழாவில் மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, வினாடி வினா போட்டி, நடத்தி பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.






