சுமார் 7 அடி நீளம் உள்ள மலைப்பாம்புசிக்கி கொண்டது

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழ்ஒரத்தூர் கிராமத்தில் ஓடை பாலம் அருகே சுமார் 7 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு பழைய கிழிந்த மீன்பிடி வலையில் சிக்கி கொண்டது, அதை பார்த்த ஊர் சிறுவர்கள் கத்தியதால் பெரியவர்கள் வேப்பூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சதாசிவம் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து வலையை அப்புறப்படுத்தினர், பின்னர் வனத்துறை அலுவலர் ஆல்வின் வசம் ஒப்படைத்தார்கள், மலைப்பாம்பு காட்டுமைலூர் வனப்பகுதியில் உயிருடன் விடப்பட்டது.