திருப்­பதி லட்டில் குட்கா புகை­யிலை வெடித்த அடுத்த சர்ச்சை!

திருப்­பதி, செப் 25 திருப்­பதி வெங்­க­டா­சல­பதி கோவிலில் வழங்கப்­ப­டும் உல­கப் பிரசித்தி பெற்ற லட்டு பிர­சாதம் மாட்டி­றைச்சி கொழுப்பு மற்றும் பன்­றிக் கொழுப்பு கலந்த நெய்யி­னால் தயாரிக்­கப்­ப­டுகி­றது என்ற சர்ச்சை பூதாகர­ மாக வெடித்துள்­ளது.
இந்­நி­லையில் திருப்­பதி லட்டில் குட்கா புகையிலை பொருட்­கள் இருப்­ப­தாக பக்­தர் ஒரு­வர் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்­சை­யைக்
கிளப்பியுள்­ளது.தெலங்­கானா மாநி­லம் கம்­மம் மாவட்­டத்­தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செப்­டம்­பர் 19 ஆம் தேதி திருப்­பதி
கோவிலுக்குச் சென்­றுள்­ளார். உற­வி­னர்­க­ளுக்குக் கொடுப்­ப­தற்­காக அங்­கி­ருந்து லட்டு பிர­சாதம் வாங்கி வந்­துள்­ளார்.அதை உற­வி­னர்­க
ளுக்கு எடுத்துக் கொடுக்­கும் ­போது அதிலிருந்து குட்கா புகை­யிலை பொருட்­கள் உதிருவதாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்­டுள்­ளார். இந்­நி­லையில் இந்த குற்­றச்­சாட்­டைத் திருப்­பதி தேவஸ்­தா­னம் முற்றி­லுமாக மறுத்துள்­ளது. மேலும் வதந்­திக­ளைப் பரப்ப வேண்­டாம் என்று கோரிக்கை விடுத்துள்­ளது.