திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டம்
மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி
மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில், இன்று 20.12.25 மாலை 2.30 மணி அளவில் மேற்பார்வை பொறியாளர் திருநெல்வேலி திருமதி அகிலாண்டேஸ்வரி அவர்களின் உத்தரவின் அடிப்படையில் நடைபெற்ற இப்பேரணியை கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் திரு சுடலை ஆடும் பெருமாள் அவர்கள் தலைமை தாங்கி கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
விழிப்புணர்வு பேரணி சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷன், பழைய பஸ் நிலையம், மாவடி , அம்பை சேரன்மகாதேவி சாலை வழியாக சென்று சேரன்மகாதேவி புதிய பேருந்து நிலையம் வழியாக மின்வாரிய அலுவலகத்தை வந்தடைந்தது.
இவ்விழாவில் கல்லிடைக்குறிச்சி செயற் பொறியாளர் திரு சுடலை ஆடும் பெருமாள் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.
மேலும், சேரன்மகாதேவி உதவி செயற் பொறியாளர் திரு. சந்திரன் ,விகே புரம் உதவி செயற்பொறியாளர் ,அம்பை உதவி ,செயற்பொறியாளர் கல்லிடைக்குறிச்சி உதவி செயற்பொறியாளர், ஆகியோர் மின் சிக்கனத்தை பற்றி விரிவாக பேசினார்கள்.
இவ்விழாவில் கல்லிடைக்குறிச்சி கோட்டம் உட்பட்ட அனைத்து பொறியாளர்களும் பணியாளர்களும் மற்றும் வருவாய் பிரிவு அதிகாரிகளும் மேலும் சேரன்மகாதேவி முஸ்லிம் கமிட்டி பள்ளி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் சமூக ஆர்வலருமான நெய்னா முகமது,
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் பக்கீர் மைதீன், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தில் நகரத் தலைவர் பத்தமடை பீர் மைதீன் ,மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட மகளிர் அணி செயலாளர் சைலா கேத்ரின், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் பொன்னழகன், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சேரன்மகாதேவி நகரத் தலைவர் பீர்காதர் ,மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆனி, மல்லிகா, ஆப்த மித்ரா முதல் நிலை தன்னார்லர்கள் முத்துலட்சுமி, விஜயா, மாதவன் ,குட்டி பாண்டி மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.






