நெல்லை ஸ்காட் மருத்துவ மையம், ஹைதராபாத் ஒமேகா கேன்சர் கேர் இணைந்து பல்நோக்கு மேம்பட்ட அதிநவீன புற்றுநோய் சிகிச்சை!

நெல்லை,ஆக.26&
நெல்லை பொன்னாக்குடி ஸ்காட் மருத்துவ மையத்தில் ஐதராபாத் ஒமேகா கேன்சர் கேர் நிறுவனம் ஒத்துழைப்புடன் இணைந்து உலகத் தரம் வாய்ந்த பல்நோக்கு மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை அதிநவீன முறையில் அளிக்கப்படவுள்ளது இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்காட் மருத்துவமனை மற்றும் கல்வி குழும நிறுவனர்-தலைவர் முனைவர் கிளிட்டஸ்பாபு, ஹைதராபாத் ஒமேகா மருத்துவமனைகள் குழும நிர்வாக இயக்குநர் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் திரு மோகனா வம்சி ஆகியோர்
பங்கேற்று கூறியதாவது. திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவ துறையில் ஒரு புரட்சியாக புற்றுநோயை குணப்படுத்துவதற்கான அதிநவீன மேம்பட்ட சிகிச்சை ஸ்காட் மெடிக்கல் மைய மருத்துவமனையில்
தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே புற்றுநோய் தடுப்புக்கான அதிநவீன சிகிச்சை முறைகளை தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒமேகா கேன்சர் கேர் நிறுவனம் அறிமுகப்படுத்துவதில் மிகவும்
மகிழ்ச்சியடைகிறோம்.நுண்ணறிவின் மூலமாக எதோஸ் லின்க் சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது. இதில் புற்றுநோய் சிகிச்சை குறித்து இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், செயற்கை திட்டமிடல் மற்றும் சிறந்த முறையில் சிகிச்சையை மேம்படுத்த பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மற்றும் ஸ்காட் மருத்துவ மையத்தின் பாரம்பரிய மரபு ஆகியவற்றின் கூட்டு செயல்பாடு, சர்வதேச தரம் வாய்ந்த
இந்த புற்றுநோய் பராமரிப்பு வசதி, ஒமேகாவின் நிபுணத்துவம் புற்றுநோயியல் மருத்துவ சேவைகளை தென்தமிழகத்தின் திருநெல்வேலியின் மையப்பகுதிக்கு கொண்டுவர தயாராக உள்ளது. . இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்காட் குழும துணை தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு,
பொதுமேலாளர் கிருஷ்ணகுமார், பெங்களூரு ஹெல்த் சைன்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி அனுமந்த் ராவ், இன்போசிஸ் நிறுவன மூத்த திட்ட மேலாளர், அதஷ்யா பரீடா ஆகியோர் கலந்து கொண்டனர்.