பெயர் விவரம் தெரியாத சுமார் 55 வயது மதிப்புள்ள முதியவர் தள்ளுவண்டி கடை முன்பாக இறந்து கிடந்தார்.

 

சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில்
முதியவர் சடலம் கண்டெடுப்பு

வயது முதுமையின் காரணமாக இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதி இருந்து வருகிறது. இந்தப் பகுதியானது அதிக போக்குவரத்து நிறைந்த மக்கள் நடமாட்டம் உள்ள பரபரப்பான பகுதியாகும். இந்நிலையில்
பெயர் விவரம் தெரியாத சுமார் 55 வயது மதிப்புள்ள முதியவர் தள்ளுவண்டி கடை முன்பாக இறந்து கிடந்தார். இந்நிலையில் அப்பகுதியில் பேருந்துக்காக நின்றவர்கள் காவல் துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர் இறப்புக்கான காரணமாக வயது முதுமையின் காரணமாக இருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் நடைபெற்றுள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையில் நனைந்து இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்துகிறது. மேலும் அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அதிர்ச்சியோடும் பார்த்து வருகின்றனர்.