அரசு பேருந்தின் அவல நிலை சீட்டில் அமர்ந்திருந்து தொங்கியபடியே பயணித்த பயணியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

 

அரசு பேருந்தின் அவல நிலை சீட்டில் அமர்ந்திருந்து தொங்கிய படியே பயணித்த பயணியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

கடலூர் மாவட்டம் சிதம்பரம பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு அரசு பேருந்து தண்டேஸ்வரநல்லூர்,கொய்யாப் பிள்ளை சாவடி வழியாக துணிசிரமேடு, முகையூர், பெருங்காலூர், டி.நெடுஞ்சேரி, புத்தூர், வீராணம் ஏரிக்கரை பகுதியாக லால்பேட்டையை அடைந்து பின்பு காட்டுமன்னார் கோயில் பேருந்து செல்கிறது

இந்த நிலையில் பகுதியில் 30 மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் பேருந்துகள் மிகக் குறைவாகவே இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் நகரங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து ஒன்றில் சீட்டுகள் சிதளமடைந்து காணப்பட்டது மேலும் அந்த சீட்டில் பயனாளி ஒருவர் அமர்ந்த போது மேலே உள்ள கம்பிகளை பிடித்து தொங்கியபடியே அந்த சீட்டில் உட்கார்ந்து காட்டுமன்னார்கோயில் நோக்கி பயணம் செய்து வந்தார் மேலும் பேருந்தில் மேற்கூரைகள் சிதலமடைந்து காணப்படுகிறது


மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் பேருந்துகளை ஆய்வு செய்த பின்பு அதிக அளவு பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மட்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்