காட்பாடி வள்ளிமலை ரோடு ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில்மஹா சங்கடஹர சதுர்த்தி விழா!

வேலூர்,ஆக. 24: வேலூர் அடுத்த,காட்­பாடி வள்­ளி­மலை கூட்­டுரோடு அரு­கில் உள்ள ஸ்ரீவர­சித்தி விநா­ய­கர் கோயி­லில் மஹாசங்­கட­ஹர சதுர்த்திவிழா விமரிசைய க நடந்­தது.இதையொட்டி ஸ்ரீவ­ர­சித்தி விநா­யக­ருக்கு பல்­வேறு வகை­யான திர­வியங்­கள் கொண்டு சிறப்பு அபி­ஷேகம் செய்­யப்­பட்­டது.இதை தொடர்ந்து மலர்மாலை,வெட்­டிவேர் மாலை, அருகம்­புல் மாலை,பட்­டுவஸ்­தி­ரம் அணி­வித்துமகா தீபா­ர­தனை காண்பிக்­கப்­பட்­டது. அதை­யடுத்து சுவா­மிக்கு தங்­கக்­க­வசம் அணி­விக்­கப்­பட்­டது. திரளான பக்­தர்­கள் கலந்து கொண்டு சாமி தரி­ச­னம் செய்­த­னர். மஹா சங்­கட­ஹர சதுர்த்­தியை முன்னிட்டு பக்­தர்­க­ளுக்கு பிரசா­தங்­கள் விநி­யோ­கம் செய்­யப்­பட்­டது. பூஜைஅலங்­கா­ரத்தை பிரம்­ம­புரம் ஜெயக்­கு­மார் அர்ச்­சகர் செய்­தி­ருந்­தார். ஸ்ரீமஹா­லஷ்மி பாத்­தி­ரக்­கடைஉரி­மை­யா­ளர் ரமேஷ் குடும்­பத்­தார் பூஜைக்­கான ஏற்­பா­டுகளை செய்­தி­ருந்­த­னர்.